சென்னை,

ல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

பேஸ்புக் சமூகவலைதளம் மூலம் இளைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பலர் குடும்பத்தோடும்  பங்கேற்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இந்த பேரணி நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கோரி அமைதி ஊர்வலத்தில் கோஷம் எழுப்பினர்.

தமிழர் பண்பாட்டை அழிக்கும் விதமாக பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதால் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைபட்டிருப்பதாகவும், நம்முடைய பாரம்பரிய உழவு முறைகளை அழித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் சுயலாபத்திற்காக ஜல்லிக்கட்டுக்கு தடைபெற்றி ருப்பதால், இதற்கான உரிய சட்ட திருத்தத்தை உடனே  கொண்டுவர மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி கண்டிப்பாக நடைபெற வேண்டும் என பேரணியில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் காரணமாக மெரினா பகுதி பரபரப்பாக காணப்பட்டது.