ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் உண்ணாவிரதம்!

Must read

மதுரை,

ல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக மதுரையில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மதுரையில் தமிழ் தேசிய வீரரர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய தமிழ் தேசிய வீர சங்கத்தினர், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் சீரழிவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாணவர் ஒருங்கிணைப்பு இயக்கத்தினரும் பங்கேற்று, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி  பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article