அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக், யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

கால் பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த பட்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்குகளில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் பரவியது. மெர்சல் படத்துக்காக அமைக்கப்பட்ட ஹவுஸிங் போர்டு வீடுகள் செட்டில் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தளபதி 63 படப்பிடிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என படக்குழு தெரிவித்துள்ளது.