புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரின் தகவல்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த சஜிஜத்பாத் என்பவருக்கு சொந்தமான மாருதி கார் தாக்குதலுக்கு முன்பாக ஏழு முறை கைமாற்றப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தகவல் அளித்துள்ளது.

pulwama

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவந்தொபோரா என்னும் தற்கொலைப்படை நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோடூர தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்திய தற்கொலைப்படையை சேர்ந்த நபர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலின் போது மாருதி காரில் வெடிக்குண்டுகளை ஏற்றி வந்த தீவிரவாதி சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த வாகனம் மீது மோதச் செய்துள்ளார். வெடிகுண்டு வெடித்ததில் இந்திய வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட காரின் தகவல்களை என்.ஐ.ஏ. கண்டறிந்துள்ளது.

அனந்த்நாக் மாவட்டம் பிஜிபெஹரா பகுதியை சேர்ந்த சஜிஜத் பாத் என்பவருக்கு சொந்தமான மாருதி கார் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதை என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. காரின் சேஸ் எண் மற்றும் எஞ்சின் எண்ணை வைத்து உளவுத்துறை விசாரணையை தொடர்ந்துள்ளனர். இந்த கார் தாக்குதலுக்கு முன்பாக ஏழு முறை கைமாற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சஜிஜத்பாத்தின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அவரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து சஜிஜத்பாத் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.