குன்னூர்,
நீலகிரி மாவட்ட தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளை தேடி தமிழக அதிரப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
moister
நீலகிரி மாவட்டம் தமிழக – கேரள எல்லையில் மாவோயிஸ்ட்களின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதின் எதிரொலியாக மேலும் பல மாவோயிஸ்டுகள் கேரள  எல்லையில் இருந்து தமிழக பகுதிக்கு ஊடுருவி உள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான மஞ்சூர்,கெத்தை, கிண்டகொரை மற்றும் அப்பர்பவாணி உள்ளிட்ட இடங்களில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்நத மாவோயிஸ்ட்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படு கிறது.

மலைப்பகுதிகளில் இவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டு உள்ளதால் மாநில காவல் துறையினர் மாவோயிஸ்டுகளை  தேடும் வேட்டையில் தீவிரமாக  ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவோயிஸ்ட்களின் தலைவர் விக்கரமகவுடா மற்றும் சோமன்பத்மநாபன் உட்பட 32 பேரின் புகைப்படங்களை பேனர்களாக கட்டி பொதுமக்களின் பார்வைக்காக காவல்துறை யினர் வைத்துள்ளனர்.
மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் மலை கிராமங்களில் வசிப்பவர்களிடம் புதியவர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் ஒட்டியுள்ள மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களில் 12 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டிய அப்பர்பவாணி மற்றும் கின்டகொரை,கெத்தை,முல்லை உள்ளிட்ட இடங்களில் தமிழக அதிரடி படையினர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதம் சென்னையில் 14 வருடங்கள் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.