ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார்.

அஜித் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலம் மணாலி, ரோதங் பாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பி.எம்.டபள்யூ பைக்கில் பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்த நிலையில், இந்த குழுவில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்திருக்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இருந்து லே வரை பயணம் செய்யும் இந்த குழுவில் மஞ்சு வாரியரும் செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.

அஜித்துடன் AK61 படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகின்றனர்.