மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்2022: 40 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி…

Must read

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவதையொட்டி, அங்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதற்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  5 மாநிலங்களிலும் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை வாக்குப்பதிவு நடைபெபறும். பஞ்சாப், உத்தராகண்ட், கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதியும், மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதன் முறையாக வாக்களிப்பதற்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 18.34 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 8.55 கோடிப்பேர். 80 வயதுக்கு மேற்பட்டோர், உடல் நன் பாதிக்கப்பட்டோர், கொரோனா தொற்று உடையவர்கள் தபால் ஓட்டை செலுத்தலாம். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரம் ஆகியவை பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 38 தொகுதிகளில் அடுத்த மாதம் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக 22 தொகுதிகளுக்கு மார்ச் மூன்றhம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மாநிலத்தில்,  இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி  தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 24 வேட்பாளர்கள் முதல்கட்ட தேர்தலிலும், 16 வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலிலும் போட்டியிடவுள்ளனர். மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

More articles

Latest article