மேற்கு வங்கம் : கலவர புகைப்படம் என சினிமா ஸ்டில்லை இணையத்தில் பதிந்தவர் கைது

கொல்கத்தா

திரைப்படத்தில் வெளியான ஒரு காட்சியின் புகைப்படத்தை, மேற்கு வங்க கலவரப் புகைப்படம் என்னும் பெயரில் மீடியாவில் பதிந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் முகநூலில் முகமதுநபியை அவமானம் செய்யும் விதத்தில் ஒரு புகைப்படத்தை பதிந்தார்,  அதன் காரணமாக மோதல் ஏற்பட்டு இப்போது அது மதக் கலவரமாக உருவெடுத்துள்ளது.  அந்தக் கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறி இணையத்தில் கொல்கத்தாவை சேர்ந்த 38 வயது வாலிபர் ஒருவர் ஒரு புகைப்படத்தை பதிந்தார்.

அது போஜ்புரி திரைப்படமான ”அவுரத் கிலோனா நஹி” என்னும் படத்தில் வரும் காட்சியின் புகைப்படம் என பின்பு தெரிய வந்தது.   ஆனால் அதற்குள் அது நாடு முழுவதும் வைரலாக பரவியது.  பலரும் அதை உண்மை என நம்பி தாங்களும் பதிந்தனர்.   ஆனால் அது தவறான செய்தி என பாஜக வின் நிர்வாகி உட்பட பலரும் தெரிவித்தனர்.

தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் வெளியிட்ட புகைப்படத்தால் கலவரம் மேலும் அதிகமானதாகவும்,  இது போல் போலி தகவல் வெளியிடுவோர் மீது கடும் தண்டனை எடுக்கப்படும் எனவும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Also read https://patrikai.com/bjp-executive-member-vijeta-malik-passes-off-fake-image-from-bhojpuri-film-as-violence-against-hindus-in-west-bengal/


English Summary
Man who posted fake image was arrested at kolkatta