பீஜிங்,

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால் 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீரில் நுழையும் என சீன பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டல் என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை நீரு பூத்த நெருப்பு போல அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சீனாவும் எல்லை பிரச்சினை செய்து வருகிறது.

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் காஷ்மீருக்குள் நுழையும் என்று சீன அரசு மீடியாவான ‘குளோபல் டைம்ஸ்’ இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் செய்தி வெளி யிட்டுள்ளது.

அதில்,  ” பூடானில் டோக்லம் பகுதியில் சீனத்துருப்புகள் சாலை அமைப்பதை இந்தியப்படைகள் தடுத்துள்ளன.  பூடான் நாடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா கூறுகிறது. அதே நடைமுறையை சீனாவும் கடைபிடிக்க வேண்டியது இருக்கும் என்று மிரட்டி உள்ளது.

மேலும்,  பாகிஸ்தான் கேட்டுக்கொண்டால், 3-வது நாட்டு ராணுவம் (சீன ராணுவம்) காஷ்மீரில் நுழையும்.

இந்தியா பூடானுக்கு உதவவில்லை. மாறாக அந்த நாட்டுக்கு உதவி செய்யும் போர்வையில் பூடானை பயன்படுத்திக் கொள்கிறது ” என குற்றம்சாட்டி உள்ளதும.

இந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை  சீனாவின் வெஸ்ட் நார்மல் பல்கலைக்கழகத்தின் இந்திய கல்வித்துறை இயக்குநர் லாங் ஜிங்ஜிவான் எழுதியுள்ளார்.

பூடானின் டோகலம் இந்தியா, சீனா மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதி. இதை, டோங்லாங் என்ற பெயரில் அழைக்கும் சீனா உரிமைக் கொண்டாடிவருகிறது.

பூடானுக்கும் சீனாவுக்கும் தூதரக உறவு கிடையாது.  அதனால், இந்தியா உதவியுடன்தான் சீனாவை பூடான் எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது.

சீனா  முதன்முறையாக காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடைய ஆதரவு பாகிஸ்தானுக்கே என்பதை உணர்த்தும் வகையில் இந்த கட்டுரையில் எழுதப்பட்டு உள்ளது.

இது இரு நாடுகளிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதும்..