குளியலைப் படம்பிடித்து பிளாக்மெயில்.. கம்பி எண்ணவைத்த..தைரிய பெண்மணி..

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்கள் ,இந்தூர் சென்று விட்டு அண்மையில் சொந்த ஊர் திரும்பினர்.

கர்ககோடா காவல்நிலையத்துக்கு உட்பட்ட குமேரியா பதோலி என்ற இடத்தில் அவர்கள் இருவரும் முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த பெண்களில் ஒருவர் குளிக்கும் போது அதே ஊரை சேர்ந்த இரு கயவர்கள், தங்கள் செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்துள்ளனர்.

அந்த ஆபாச காட்சியை , அந்த பெண்ணின் செல்போனுக்கு அனுப்பியுள்ளனர்.

‘’ எங்களைச் சந்திக்க நீ உடனடியாக வரவேண்டும். வராவிட்டால் உனது குளியல் காட்சியை  சமூக வலைத் தளங்களில் வெளியிடுவோம்’’ என மிரட்டியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து கர்ககோடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணை ஆபாசமாகப் படம் பிடித்த சுனில், லட்சுமணன் ஆகிய இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

தனிமைப் படுத்தும் முகாமில் பெண் ஆபாசமாகப் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்