விவாகரத்து கேட்கும் 5-வது பெண்… பேட்ட நடிகரின் வில்லங்க குடும்பம்..

ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக்.

இந்தி சினிமா உலகில் பிரபலமாக விளங்கும் நடிகர்.

நவாசுதீனிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மனைவி ஆலியா என்ற அஞ்சனா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஊரடங்கு காலம் என்பதால் ஈ-மெயில் வாயிலாக தனது வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதற்கு நவாசுதீன் இதுவரை பதில் எதுவும் அனுப்பவில்லை.

இந்த நிலையில் ஆலியா அளித்துள்ள பேட்டி ஒன்றில்,’’நவாசுதீன் சகோதரர் என்னை அடித்து உதைத்தார். அவர் மட்டுமல்ல, நவாசுதீன் குடும்பமே என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியது’’ என்று பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

‘’ நவாசுதீன் குடும்பம் பெண்களை மோசமாக நடத்தும் குடும்பம். அந்த குடும்பத்து ஆண்களிடம் இருந்து  ஏற்கனவே 4 பெண்கள் விவாகரத்து பெற்றுச் சென்றுள்ளனர். விவாகரத்து கேட்கும் 5- வது பெண் நான் ‘’ என ஆலியா புகார் கூறியுள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்