பிரபல மலையாள திரைப்பட பாடலாசிரியர் ரமேசன் நாயர் காலமானார்….!

Must read

மலையாள சினிமாவின் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த பத்தாமுதயம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ரமேசன் நாயர்.

கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ள கவிஞர் ரமேசன் நாயர் 3000-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார்.

சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் ரமேசன் நாயர், தமிழில் உயரிய நூலாகத் திகழும் திருக்குறள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்

இந்நிலையில் 73 வயதான கவிஞர் ரமேசன் நாயர் இன்று உயிரிழந்துள்ளார்.பாடலாசிரியர் ரமேஷன் நாயர் மறைவுக்கு பிரபல பாடகி K.S.சித்ரா இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article