நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது

கொச்சி:

மலையாள நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகை பாவான கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இச்சம்பவம் தொடர்பாக கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில், வினீஸ் உட்பட ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நடிகர் திலீபிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை
போலீசார் கைது செய்தனர்.


English Summary
malayalam actor Dileep arrested in Malayalam actress bhavana abduction case, had hand in conspiracy, say cops