தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கேப்டன் மில்லர்.

1930 – 40 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று உருவாக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தை உருவாக்க படக்குழு மேற்கொண்டுவரும் பணிகள் அடங்கிய மேக்கிங் வீடியோ இன்று வெளியானது.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக #D50 படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.