பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் திருமணம் நாளை நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப் போவதாக சுனில் ஷெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் நாளை 23ம் தேதி காந்தலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து சுனில் ஷெட்டி வீட்டிற்கு படையெடுத்த செய்தியாளர்களிடம் கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், திருமணம் முடிந்ததும் குடும்பத்துடன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.