அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, ரச்சிதா, தனலட்சுமி, ஷெரினா, அசல் கோளாரு, நிவாஷினி, சாந்தி, மகேஸ்வரி, கதிரவன், ராம் ராமசாமி, ஜிபி முத்து, மணிகண்டன், ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர், ஜனனி, குயின்சி மற்றும் மைனா ஆகிய 21 போட்டியாளர்களுடன் அக்டோபர் மாதம் 10-ந் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 இன்றுடன் முடிவடைந்தது.

அசிம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இறுதிவரை தாக்குப்பிடித்து நின்ற நிலையில் அசீம் சீசன் 6 பட்டம் வென்றார், இரண்டாவது இடத்தை விக்ரமனும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ரேங்கிங் டாஸ்க், பொம்மை டாஸ்க், ஏஞ்சல் டாஸ்க், ஏலியன் டாஸ்க், பேக்கரி டாஸ்க்…. என்று தினமொரு விம்பரதாரர் நாளொரு செட்டு என்று ஜோராக நடைபெற்றது பிக் பாஸ் சீசன் 6.

நூறு நாட்கள் வெளியுலகம் தெரியாமல் கண்காணிப்பு கேமரா தவிர செட்டு போட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பார்வையில் மட்டுமே நேரடியாக வலம்வந்தனர் போட்டியாளர்கள்.

தவிர, முந்தைய பிக் பாஸ் சீசன்களில் டி.வி. வழியாக படுக்கையறைக்கு வந்த காட்சிகளை மட்டுமே பார்த்தவர்கள், இந்த சீசன் 6 தமிழ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை ‘ஹாட்ஸ்டார்’ மூலம் 24 மணிநேரமும் லைவாகப் பார்த்துப் பரவசமடைந்தனர்.

எந்த சீசனிலும் இல்லாத வகையில் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்காக அரசியல் கட்சி தலைவரும் கூட வாக்கு சேகரிக்க, இந்த ரியாலிட்டி ஷோவுக்கு சர்ச்சையும் வாக்காளர்களும் அதிகரித்தனர்.

இந்த நிலையில் இந்த நூறுநாட்களைத் தாண்டிய படப்பிடிப்பில் சிறப்பாக செயல்பட்ட அசீமுக்கு பட்டம் வழங்கப்பட்டு இன்றோடு நிறைவுக்கு வந்தது பிக் பாஸ் சீசன் 6.