கீர்த்தி சுரேஷின் ‘மைதான்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

Must read

கடந்த 1950ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவும், மேனேஜராகவும் இருந்த சையது அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் படம் மைதான்.

இப்படத்தில், சையது அப்துல் ரஹீமின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். சைவான் கூவாட்ராஸ் மற்றும் ரிதேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். இப்படத்தை அமீத் ரவீந்திரநாத் சர்மா இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் இது. இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

More articles

Latest article