காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு திடீரென்று டிவிட்டரிலிருந்து வெளியேறியுள்ளார்.

பாஜக கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகளை உடனுக்குடன் கொடுத்து வந்தார் .

சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள் குறித்த செய்திகள், ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்

தன்னை முஸ்லிம் என்று கூறிய போதும் ‘ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத் கான்’ என்று வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தவர் குஷ்பு.

இந்நிலையில் தற்போது தனது பக்கத்தை நீக்கிவிட்டார் . தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை. நிம்மதியாக வாழ விரும்புகிறேன். ட்விட்டரில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. ஆகவே, நான் எனது இயல்பில் இல்லை” என்று தெரிவித்தார் குஷ்பு..