மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், இன்று காலை திடீர் திருப்பமாக, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், மாநில கவர்னரின் செயல்குறித்து, உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக  சிவசேனா,  சரத்பவார் தலமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த 12ந்தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி, மாநில கவர்னர் கோஷ்யாரின் அறிக்கையின் பேரில் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாநிலத்தில் ஆட்சி அமைக்க 144 உறுப்பினர்கள் ஆதரவு தேவையப்படும் நிலையில், மாநிலத்தின் 2வது பெரிய  கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது.  பாஜகவின் 105 இடங்களுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 உறுப்பினர்கள் ஆதரவுடன்   கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தலைமையில் இன்று காலை 8 மணி அளவில் ராஜ் பவனில், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டனர்.

எதிர்பாராத திருப்பமாக  இன்று காலை தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சரத்பவார் மற்றும் சிவசேனா, காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும் சரத்பவார் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாஜக ஆட்சி அமைய் உதவி செய்தாக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதி மன்ற்ததில் வழக்கு தொடர  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.