சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மகான் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக படத்தை ஓடிடியில் வெளியிடுகின்றனர். மகானின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளனர்.