ஜெய் பீமுக்கு முன் சத்தமில்லாமல் ரசிகர்களை கவர்ந்த இன்னொரு திரைப்படம், ஓ மணப்பெண்ணே. டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படத்தை பரவலாக அனைவரும் பார்த்தனர்.

தெலுங்கு பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக்கான இதில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தனர். கார்த்திக் சுந்தர் படத்தை இயக்கியிருந்தார். தெலுங்குப் பட தயாரிப்பாளர்களான சத்தியநாராயண கொனரு, ரமேஷ் வர்மா படத்தை தயாரித்திருந்தனர்.

படத்துக்கு கிடைத்த வரவேற்பில் இதே கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணைகிறது. இதுவும் காதல் கதைதானாம். ஆனால், இதுவரை திரையில் பார்க்காத காதலாக இருக்குமாம்.