‘மகான்’ படத்தின் புகைப்படங்கள் வெளியீடு….!

Must read

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கும் படம் மகான். இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தில் துருவ் விக்ரமின் அறிவிப்பு வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

முன்னதாக வெளியான மகான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் பாடலாக வெளியான சூறையாட்டம் பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து மகான் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மகான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் மகான் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

More articles

Latest article