வேற மாரி எண்ட்ரி கொடுக்கும் சாந்திப்பிரியா….!

Must read

நடிகர் ராமராஜன் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் மூலம், பலருக்கும் ஃபேவ்ரைட் நாயகியாக மாறியவர் சாந்திப்பிரியா. நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் சாந்திப்பிரியா.

இப்போது எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்று பலரும் அறியாமல் இருந்த நிலையில், தற்போது ஓடிடி மூலம் புதிதாக எண்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்த இவர், இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.

2012-க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original நிறுவனம் மற்றும் Mx player-க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க, பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் சாந்திப்பிரியா நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

More articles

Latest article