சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இருந்தும் சர்வதேச போட்டிகளில் இருந்தும் 2016ம் ஆண்டு ஓய்வு பெற்றார் வாட்சன்.

தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்த இவர் 2020ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகினார்.

தற்போது உலகக்கோப்பை போட்டிகளுக்காக வர்ணனையாளராக இந்தியா வந்துள்ள ஷேன் வாட்சனிடம் பிரபல யூ-டியூபர் மதன் கௌரி ‘இன்டர்வியூ’ எடுத்தார்.

இந்த இன்டர்வியூவில் வாட்சன் தனது தனித்திறமையாக கிட்டார் வாசித்துக் காண்பித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.