சென்னை: தை மாதம் என்பதால் ஏராளமான முகூர்த்த நாட்கள் மற்றும் தைப்பூசம் வருவதையொட்டி, மதுரை மல்லி வரலாறு காணாத அளவில் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ மதுரை மல்லி ரூ.5ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு, விவசாயிகளுக்கு சற்று வருமானத்தை கொடுத்தாலும், கொள்ளை சம்பாத்தியம் பெறுவது வியாபாரிகள்தான்.  இதற்கிடையில் பூங்களின் விலை உயர்வாக பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர்.

விழாக்காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை சாதாரண விலையை விட பல மடங்கு உயர்ந்து வருவது வழக்கம். அதுபோல,  வெயில் காலம்,  மழைகாலம், குளிர்காலம் என காலசூலுநிலைக்ளுக்கு ஏற்பவும் பூக்களின் விலை மாறு காணப்படும். பொதுவாக,  மழைக்காலத்தில் பிச்சி போன்ற பூக்களும், வெயில் காலத்தில் மல்லிகை, பனிக்காலத்தில் காக்கட்டான் பூக்கள் சீசன் ஆகும்.

தற்போது மழைக்காலம் முடிவடைந்து பனிப்பொழிவு இருப்பதால் மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து விட்டது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து வருகிறது. மேலும் தற்போது தைமாசம் என்பதாலும், இந்த மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகம் மற்றும் விசேஷச நாட்களும் அதிக அளவில் இருப்பதால், பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சாதார பூக்களே, கிலோவுக்கு ரூ.2 ஆயிரமாக விற்பனை செய்யப்படும், புகழ்பெற்ற மதுரை மல்லி  போன்றவை கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் நாளை தைப்பூசம் மற்றும் முகூர்த்த நாட்கள் வருவதால், மதுரையில் இன்று கிலோ மல்லியின் விலை ரூ.5 ஆயிரம்  முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.  பிச்சி பூக்கள் கிலோவுக்கு ரூ.1,500  முதல் 2500 வரையும், சாதாரண  காக்கட்டான் பூக்களும் கிலோவுக்கு ரூ.2000 முதல் 2ஆயிரம், கணகாம்பரம் கிலோ ரூ.1500 முதல் 2ஆயிரம் வரை  விற்பனை செய்யப்படுகிறது.

பூக்களின் விலை உயர்வு, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றால், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். ஆனால், விவசாயத்தில் புகுந்துள்ள இடைத்தரகர்களும், விற்பனை செய்யும், வியாபாரிகள் மட்டுமே சீசனுக்கு ஏற்றவாறு விலைகளை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.