நடிகர் தனுசுக்கு எதிரான மனு: மதுரை உயர்நீதி மன்றம் மீண்டும் தள்ளுபடி

Must read

மதுரை:

டிகர் தனுஷை தனது மகன் என்று கூறி வரும் மதுரை மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரையை சேர்ந்த தம்பதியினர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், விசாரணை செய்த மதுரை உயர்நீதி மன்ற கிளை, கதிரேசன் தம்பதியினர் தொடர்ந்த வழக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி  தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கின்போது, நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி எனவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கதிரேசன் தம்பதியினர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வதற்காக நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு பட்டியலிடப்பட்டது.

இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த நீதிபதி இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்பதற்கான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் இன்று மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுசுக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது  அல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

More articles

Latest article