மதுரை: தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதாகவும், தோல் உள்ளிட்டவற்றிற்காக விலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது யானைகள் தந்தங்களுக்காக கடத்தப்படுவது, சர்வதேச சந்தையாக வளர்ந்துள்ளது. தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவது ஏற்கத்தக்கதல்ல. யானைகளை பாதுகாப்பது நமது கடமை.

தந்தங்களுக்காக யானையை வேட்டையாடுபவர்கள் வெவ்வேறு மாநிலங்களில் உள்ளனர். அதனால், யானைகள் இறப்பது குறித்து தமிழகத்தை தாண்டிய விசாரணை அவசியமாகிறது. ஆகையால்  தமிழகத்தில் யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.