சென்னை: அமைச்சர் கே.என்.நேரு தம்பி திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
அமைச்சர் கேஎன்.நேருவின் சகோதரரும் திருச்சி தொழிலதிபருமான ராமஜெயம்,கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடை பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வந்த விசாரணையில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த கொலை வழக்கில், திருச்சி மாநகர காவல்துறையில் தொடங்கி, சிபிசிஐடி, சிபிஐ வரை சென்று பல்வேறு விசாரணை குழுக்கள் விசாரித்தும் இதுவரை கொலையாளிகள் யார் என்பது கண்டறியப்பட முடியாத சோகம் உள்ளது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், நாங்கள் கண்டுபிடித்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம் என்று கூறினார்கள். தொடர்ந்து பதவி ஏற்றதும், வழக்கு தூசி தட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கான தனி விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, பல முறை அதிகாரிகள் மாற்றப்பட்டு. விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தமிழகத்தின் முக்கியமான வழக்குகளில் சிக்கிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல் வெளியானது. இதனால், சிறப்பு விசாரணை குழுவும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இநத் நிலையில், இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கே.என்.ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையை முன்கூட்டியே முடிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2012 முதல் 2017 வரை சிபிசிஐடி விசாரித்தது, 2017 முதல் 2022 வரை சிபிஐ விசாரித்தது, இப்போது கடந்த ஆண்டு முதல் எஸ்ஐடி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு! ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி…