கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகாரை விசாரிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் பிரதிநிகள் அடங்கிய உள் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டங்களின்படி குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்கான விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கலாக்ஷேத்ராவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 7 மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக குரல் கொடுத்த ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் .

தவிர, ரிட் மனு நிலுவையில் உள்ளதால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.