சென்னை,

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நடிகர் விஜயின் மெர்சல் படத்திற்கு வழக்கு காரணமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையை தொடர்ந்து மெர்சல் படத்திற்கான தடையை ஐகோர்ட்டு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

டிநகர் விஜய் – அட்லீ  மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் சாதனை படைத்தது. இந்நிலையில்  தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு காரணமாக மெர்சல் படத்தின் தலைப்பை பயன்படுத்த கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் மெர்சல் தலைப்பு வேறு, மெர்சலாயிட்டேன் தலைப்பு வேறு என வாதிடப்பட்டது.  அதேப்போன்று ராஜேந்திரனும் தரப்பிலும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில்,  மெர்சல் படத்தின் பெயருக்கு தடையில்லை, அந்த பெயரிலேயே படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும்,  தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தும். உத்தரவிட்டது.

இதன் காரணமாக படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் தயாரிப்பாளர் தரப்பு ஈடுபட்டு வருகிறது.