சென்னை: ‘பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம்; இவருக்கு இது வழக்கம்’  என்றும்,  வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும்  அறிந்தே, வேண்டுமென்றேன முறைகேடான வகையில் செயல்பட்டு உள்ளார் அருண் ஐ.பி.எஸ் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ் தற்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பவர் அருண் ஐபிஎஸ். இவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த திமுக ஆட்சிகாலத்தில் திமுகவின் ஏவலாளியாக செயல்பட்டது அனைவரும் அறிந்ததே. திமுக ஆட்சி குறித்து விமர்சிப்பவர்களை இரவோடு இரவாக கைது செய்வதும், அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்வதுடன், தேவையின்றி குண்டர் சட்டத்தையும் பயன்படுத்தி, அச்சுறுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால்,  மக்களிடையேஅவர்மீதான மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

இதற்கிடையில்,  சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ் ரியல் எஸ்டேட் அதிபர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கடந்த 2026ம் ஆண்டு இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தோஷ் வர்மா என்பவர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  அப்போது சென்னை காவல்துறை ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ் இவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தோஷ் வர்மாவின் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது மகள் வர்ஷா வர்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ததுடன் வழக்கின் விசாரணைக்கு அருண் ஐபிஎஸ் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

அதன்படி கடந்த விசாரணைக்கு அருண் ஐபிஎஸ் ஆரானார். அவரிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். ஆனால், தனது பதவி காலத்தில் தனது மீதுஎந்தவொரு புகாரும் கூறப்படவில்லை என்று  தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் மே 29ந்தேதி அன்று நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்,சாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர்  அமர்வு இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அறிந்துகொண்ட நீதிபதிகள், சந்தோஷ் வர்மா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும்

பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாத வழக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்த கூடாது என தெரிந்தே பயன்படுத்தியுள்ளார் என ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2025 செப்டம்பர் மாதம், சந்தோஷ் வர்மாவின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில், விசாரணை ஏதுமின்றி எட்டு மாதங்களுக்கும் மேலாகக் கொடுமை யான தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு அந்த வழக்குகள் போதுமான காரணங்கள் அல்ல. அவரை தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய அவசரமோ அல்லது கட்டாயத் தேவையோ ஏற்படவில்லை. 

அருண் இது போன்ற தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பிப்பது இது முதல் முறையல்ல என்று குறிப்பிட்ட நீதிமன்றம், யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் என்கிற ஏ. சங்கர் மற்றும் வாராகி ஆகியோருக்கு எதிராக அவர் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவுகளையும் சுட்டிக்காட்டியது.

மேலும், 28 வருட அனுபவத்துடன் இத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க முடியுமானால், அது வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும் முழுமையாக அறிந்தே செய்யப்பட்டது என்றுதான் அர்த்தம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகியும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதை அருண் ஐ.பி.எஸ் வழக்கமாக வைத்திருந்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்! செந்தில் பாலாஜி, அனிதா வழக்கு விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா?

மனித உரிமை ஆணையத்தில் சரண்டர் ஆன சென்னை போலீஸ் கமிஷனர் அருண்….

[youtube-feed feed=1]