சென்னை ஐகோர்ட்டு: 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

Must read

சென்னை,
சென்னை ஐகோர்ட்டு 15 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர். அவர்கள் தலைமை நீதிபதி கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி  பணியிடங்கள் 75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் இப்போது 39 நீதிபதிகள் தான் உள்ளனர்.  இதையடுத்து, காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் நியமிக்க 19 வக்கீல்கள், 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சய் கிஷன் கவுல் தலைமை யிலான உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு உச்ச நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. இந்த பட்டியல் உச்ச நீதிமன்ற  நீதிபதிகளின் ஆய்வு, மத்திய சட்டத்துறையின் ஆய்வுக்குப்பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
சென்னை ஐகோர்ட்டுக்க  நீதித் துறையைச் சேர்ந்த 6 பேர் உள்பட 15 பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
high
இதையடுத்து வழக்குரைஞராகப் பணிபுரிந்து வரும்  வி.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணியன், எம்.கோவிந்தராஜ், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், ஜெ.நிஷா பானு, எம்.எஸ்.ரமேஷ், எஸ்.எம்.சுப்பிரமணியன், டாக்டர் அனிதா சுமந்த் உள்ளிட்ட 9 பேரும் இன்று நீதிபதிகளாக பதவியேற்றுக் கொள்கின்றனர்.
இதேபோன்று மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன், பதிவாளர் (நீதித் துறை) எஸ்.பாஸ்கரன், பதிவாளர் (ஊழல் கண்காணிப்பு) பி.வேல்முருகன், சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜி.ஜெயசந்திரன், மாவட்ட நீதிபதி (ஓய்வு) ஏ.எம்.பஷீர் அகமது, சி.வி.கார்த்திகேயன் ஆகிய 6 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் 15 பேருக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் உறுதிமொழி ஏற்பும், பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இதனையடுத்து ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

More articles

Latest article