திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள் குறித்து ஆராய இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு…

Must read

சென்னை: திருக்கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் விவரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருக்கோவில் ஆர்வலர் ஆர்.வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், திருக்கோவில்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாக சொத்துக்கள் தொடர்பாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், திருக்கோவில்களுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையாள சொத்துக்ளுக்கான ஆவணங்கள் காணாமல் போயுள்ளது. கோயில்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் தொடர்பான மாஸ்டர் பதிவு, மனிதவள மேம்பாட்டு அலுவலகத்தில் இருந்து காணவில்லை கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மனுதார் புகார் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு  இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

More articles

Latest article