‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை

Must read

சென்னை: ”மதன் பேசியதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்’ என பப்ஜி மதனுக்கு முன் ஜாமின் கேட்ட வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
யுடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  பப்ஜி மதனை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த  நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கிருத்திகா  நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.,  கிருத்திகாதான் யூடியூப் சேனலின் அட்மின் என்பதால், அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  ஆபாசமாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் சார்பில், அவரது வழக்கறிஞர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது,  யுடியூபர் மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாதஅளவுக்கு மோசமாக உள்ளது என கடுமையாக உள்ள நீதிபதிகள் சாடியனர்.

அப்போது மனுதாரனா பப்ஜி மதனின் வழக்கறிஞர்,  சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட யாரும் புகார் தரவில்லை என கூறினார்.

அiதத்தொடர்ந்து  பேசிய அரசு வழக்கறிஞர், யுயூபில் ஆபாசமாக பேசி சம்பாதித்த பப்ஜி மதனின் வங்கி கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். யுடியூப் மூலம் மதன் சம்பாதிக்க ஏராளமான பணத்தை பங்குச்சந்தை, பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு  செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பப்ஜி மதனுக்கு ஜாமின் கோரிய வழக்கறிஞரிடம், ‘மதன் பேசிய விடியோ பதிவுகளை கேட்டுள்ளிர்களா? முழுமையாக கேட்ட பின் நாளை வந்து வாதிடவும்‘ என்று கூறி வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

More articles

Latest article