அதிமுக ஐடி பிரிவு செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் திடீர் விலகல்…

Must read

சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் (IT) செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் திடீரென்று கட்சியில் இருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. இபிஎஸ், ஒபிஎஸ் இடையே அதிருப்தி நிலவி வந்தாலும், அது வெளிப்படையாக தெரியாதவாறு பூசி மெழுகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுகவை கைப்பற்றும் விதமாக சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் வலம் வந்து, அதிமுக தலைவர்களின் மன நிம்மத்தியை கெடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், அதிமுக ஐடி விங்  சென்னைமண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்திலும் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் அந்த ஐடி அணியின் செயலாளராக இருந்து வந்தார் அஸ்பயர் சுவாமிநாதன். இவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாகஅறிவித்து உள்ளார்.

தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள அஸ்பயர் சுவாமிநாதன்,  ஜெயலலிதா காலத்தில் இருந்த முக்கியத்துவம் ஐடிபிரிவுக்கு தற்போது இல்லை என்றுஎகுற்றம் சாட்டி இருப்பதுடன், நான் தேர்தலுக்கு முன் பல விஷயங்களை தலைமைக்கு எடுத்து கூறினேன். ஆனால் அதை தற்போதைய தலைமை கண்டுகொள்ளவில்லை.  ஜெயலலிதா ஐடி பிரிவுக்கு பல்வேறு சுதந்திரங்களை  கொடுத்தார். இப்போது இந்த பிரிவுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.  அதிமுகவின் தற்போதைய தலைமைக்கு தொலை நோக்கு பார்வை இல்லை. ந்தவித இலக்கும் இன்றி அதிமுக பயணிக்கிறது. இன்றைய அதிமுகவில் திறமைக்குக்கும், நிர்வாக திறனுக்கும் உரிய அங்கீகாரம் இல்லை ஆகவே அக்கட்சியில் இனியும் பணிக்க விருப்பமில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

More articles

Latest article