இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ’ராக்கெட்ரி’ என்கிற திரைப்படத்தில் மாதவன் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரத்தன் டாடாவின் வாழ்க்கைக் கதையில், மாதவன் டாடா கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதைச் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தன. மாதவன் டாடா கதாபாத்திரத்தில் இருப்பது போலச் சில புகைப்படங்களும் பகிரப்பட்டிருந்தன.

இதுகுறித்து மாதவன் இது நடந்தால் பலருக்கும் இது பெரிய உத்வேகத்தைத் தரும் என்று கூறியுள்ளார்

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் , “துரதிர்ஷ்டவசமாக இது உண்மையில்லை. ரசிகர்கள் சிலர் அவர்கள் விருப்பத்தில் உருவாக்கிய போஸ்டர். இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் இல்லை. அதைப் பற்றிய எந்தவித உரையாடலும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.