புதுடெல்லி:
னடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் ‘Made in China’ என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசியக் கொடியில், ‘மேட் இன் இந்தியா’ டேக் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாநில சபாநாயகர்கள் இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டுள்ளனர்.