மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார்.
இந்தப் படங்களை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.