கர்நாடகா:
பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். அவர்களை உள்ளே அனுமதிக்கும் வரை நாங்களும் போராடுவோம் என்று கூறி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

கல்லூரி விதிமுறையில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய அனுமதி இருந்தும் கல்லூரி நிர்வாகம் தடை விதிப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய மகள்களின் எதிர்காலத்தை சூறையாடுகிறோம் என்றும், கல்விக் கடவுள் சரஸ்வதி, யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.