சென்னை: கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரபோராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,   கடலூர் மாநகராட்சி காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அஞ்சலை அம்மாள் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை: சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள், சுதந்திர போராட்டத்தின்போது  ஒத்துழையாமை, சட்டமறுப்பு, மது விலக்கு போராட்டங்களில்  பங்கேற்றுள்ளார். கடலூரில் மகாத்மா காந்தியை ஆங்கிலேயர்கள் கைது செய்துவிடாமல் தடுத்து காப்பாற்றினார். இதையடுத்து அங்குள்ள காந்தி பூங்காவில் அவருக்கு சிலை நிறுவப்பட்டு உள்ளது.

இந்த சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று காணொளி காட்சி வழியாக திறந்துவைத்தார்.   இந்த நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுதந்திர போராட்டத்தின் போது சிறைச் சென்ற அஞ்சலை அம்மாளை கண்ட மகாத்மா காந்தி, தென்னாட்டு ஜான்சி ராணி எனப் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.