சென்னை: தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy – DiTN) ஆவணங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformation Strategy – DiTN) ஆவணத்தை வெளியிட்டார்.