ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிப்பெட் கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவக் கல்லூரிகளை இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் திறந்து வைக்கயிருக்கிறார்.

இந்நிலையில் இந்த கல்வி நிறுவனத்தை 2009 ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க. வைச் சேர்ந்த மு.க. அழகிரி அவர்களால் ஏற்கனவே திறக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

24 செப்டம்பர் 2009 ம் ஆண்டு அப்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிப்பெட் கல்வி நிறுவனம் திறந்துவைக்கப்பட்டது.

துவக்கி வைத்த திட்டத்தை முலாம் பூசி பெயர்ப்பலகை மாற்றி மீண்டும் திறந்து வைப்பதில் பேரீச்சம் பழம் தின்று கொட்டை போட்ட பாஜக வினர், பன்னிரண்டு ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஒரு கல்வி நிறுவனத்தையே மீண்டும் புதிதாக திறக்க இருப்பதாக கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்கு இதுபோன்று விமரிசையாக செலவு செய்து தங்கள் பெயர் பொரிக்கப்பட்ட புதிய பெயர் பலகைகளை திறந்து வைத்து கோடிக்கணக்கான ரூபாய் அந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்டதாக கூறிவரும் நிலையில் இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.cipet.gov.in/gallery/gallerypg/pic97.html