கொல்கத்தா

ன்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும்பவானிபூர் தொகுதி உள்ளிட்ட 30 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி பதவி ஏற்றார்.  ஆனால் அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  அதனால் அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்டாயம் இருந்தது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.   இந்த தேர்தலில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.   இவரை எதிர்த்து பாஜக சார்பில் பெண் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரிவால் களத்தில் உள்ளார்.

இன்று 3 மக்களவை தொகுதிகள் மற்றும் பவானிபூர் உள்ளிட்ட 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு தொடங்கி உள்ளது.  பவானிபூரில் பாஜக- திருணாமுல் இடையே நேரடி போட்டி உள்ளது.  வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க பவானிபூர் தொகுதியில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.