பெங்களூரு: லஞ்சம் கொடுத்து பெங்களூரு சிறையில் சொகுசு வசதி பெற்றதாக கூறப்படும் வழக்கில், சசிகலா, இளவரசிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுஉள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது சிறை கண்காணிப்பாளர் உள்பட பல அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதைத்தொடர்ந்து இந்து வழக்கில் முன்ஜாமின் கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும்   முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்…