புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்., 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார்.  காங்கிரஸ் அரசுக்கு 3 தி.மு.க., – எம்.எல்.ஏ.க்கள், மாகி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஆகியோர் ஆதரவு கொடுத்து வந்தனர். இதந்த நிலையில், காங்கிரஸ்  எம்.எல்.ஏ., தனவேலு கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து,  சமீபத்தில், அமைச்சர்கள் 2 பேர் மற்றும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் நாராயணசாமி பெரும்பான்மை இழந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் திமுக எம்எல்ஏ ஒருவரும் தனது பதவியை ராஜினாமா செய்ததால், நாராயணசாமி கவிழும் சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையில், மாநிலதுணைநிலை ஆளுநர் தமிழிசை, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். ஆனால்,இ சட்டசபையில் நாராணயசாமி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சபையில் இருந்து நாராயணசாமி வெளியேறியதால், காங்கிரஸ் மாநில  அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதையடுதது, முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது.

#PuducherryPoliticalCrisis,  #Assembly,  #MLAs,  #Pondicherry,  #Narayanasamy