சென்னை:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாகி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜூன் 7ம் தேதிக்குள் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த சூறாவளி சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா தெற்கு கர்நாடகாவின் உள்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது . மத்திய கிழக்கு அரபிக்கடலில் தாழ்வு தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் .காற்றழுத்த தாழ்வு பகுதி மும்பையில் இருந்து தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 1120 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.