திருவண்ணாமலை

தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

தொடர் விடுமுறை காரணமாகத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி 4 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இங்கு உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

கோவிலுக்குத் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொள்கின்றனர்.

இன்று தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக இன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை நடை திறக்கப்பட்டதிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் பொது தரிசன வழி கோவிலின் ராஜகோபுரம் முன்பில் இருந்து தொடங்கி பக்தர்கள் கோவிலின் சுற்றுச்சுவர் அருகில் உள்ள தென் ஒத்த வாடை தெருவில் இருந்து நீண்ட வரிசையாக நின்று ராஜகோபுரம் வழியாக சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் சென்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ற சில பக்தர்கள் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் கையில் குடை பிடித்த படி நின்றனர். பக்தர்கள் பொது தாிசன வழியில்  சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானது.