டெல்லி: எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்றும், வேளாண் சட்டம், டெலின்போன் ஒட்டுக்கேட்பு குறித்த பெகாசஸ் விவகாரம் பேன்றவற்றை  முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுஒத்தி வைக்கப்பட்டது.

இன்று 2வது நாள் கூட்டம் காலை வழக்கம்போல் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் சார்பில் பெகாசஸ் விவகாரம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும்,  வேளாண் சட்டங்கள், பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்  அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து  அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைப்பதாக அறிவித்தார்.  அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தனர்.