டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள்  சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை  நிறுத்தி வைத்துள்ளன.  இடையிடையே சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் சரக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கனடா நாடுவும் இந்தியா விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை ஜூலை 21ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடையை மேலும் ஒரு மாதம் நீடித்து, கனடா தடை விதித்துள்ளது  அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.