தலைவர் 171 குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிகாந்த்-தின் 171வது படமான இந்தப் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அப்டேட் அவரது ரசிகர்களை உற்ச்சாகப்படுத்தியுள்ளது.